Punnainallur Mariamman Kovil 4.94

4.7 star(s) from 167 votes
Thanjavur, 613501
India

About Punnainallur Mariamman Kovil

Punnainallur Mariamman Kovil Punnainallur Mariamman Kovil is a well known place listed as Public Places in Thanjavur , Hindu Temple in Thanjavur ,

Contact Details & Working Hours

Details

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் எனும் சிற்றூரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை அறியாதவர் எவருமே இல்லை எனலாம். இந்த கோவிலில் உள்ள அம்பாள் மஹா ஞானி சதாசிவ ப்ரமேந்தரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புற்று மண்ணால் சுயம்பு மூர்த்தியாக உருவான அம்பாளுக்கு தற்பொழுதும் அக்னி நக்ஷத்ர காலங்களில் முகத்தில் வியர்வை துளி தெரியும். இந்த வியர்வை துளியானது, விளக்கின் ஒளி பட்டு முத்து முத்தாக தெரிகிறது. இதனால் அம்மனுக்கு முத்து மாரியம்மன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுத்து அருள்பாலித்து வருகின்ற அம்மன் புற்று மண் என்பதால் நித்யபடி அபிஷேகம் கிடையாது. 5 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடைபெறும்.