EEGA Trust 3.01

#19, Nalla thanneer kulam Street, Thopputhurai
Vedaranyam, 614809
India

About EEGA Trust

Contact Details & Working Hours

Details

"ஈகா அறக்கட்டளை"
ஈகையை பெண்மையாக உருவகப்படுத்தி, ஈகையில் தாயுள்ளமாக, மென்மையின் வடிவமாக ஈகா எனப் பெயரிட்டு பாசமிகு, ஆரோக்யமிகு, ஆற்றல்மிகு, இயற்கையினோடிணைந்த சமுதாய அக,புற கட்டமைப்பை உருவாக்குதலே நமது அற அமைப்பின் நோக்கமாகும்.

"அகாலயம்"
நமது அற அமைப்பின் பாசமிகு சமூக நோக்கில், தாய்,தந்தையினரின் மகத்துவத்தை மறந்துவிட்ட மனித உள்ளங்களின் உணர்வுநிலையினை மீட்டெடுக்கவும், அரவணைப்பின்றி தவிப்போர்க்கு நாம் உறவாகவும், இயற்கைச்சார் ஆரோக்ய பராமரிப்பு, நிம்மதிச்சார் மனோதிட பயிற்சி, அகம்சார் சுற்றுசூழல், மருத்துவம்சார் உணவு முறைகள் இவற்றையெல்லாம் நம்மோடு வாழவிருக்கும் தெயவங்களுக்கு உரித்தாக்கிடவே "*அகாலயம்*" என்ற கோவிலாகும்.

உயிரோடும்,உயிர்ப்போடும் தெய்வங்கள் வாழும் அகாலயம் என்ற கோவிலைக் கட்டிட, பெற்றோரின் உன்னதம் புரிந்தோரும், உணர்ந்தோரும் கரம் கொடுங்கள்...
கரம் கொடுக்க...

ஆத்ம நிம்மதிக்காகவும், நலனுக்காகவும் தங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சேர்ந்து விடுமுறை மற்றும் விழா காலங்களில் தன்னார்வ சேவை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதனை மனமகிழ்வோடு சமர்ப்பிக்கின்றோம்.

என்றென்றும் அறவழியில்...
ஈகா அறக்கட்டளை
+91 9443553364