DigitAll India 3.37

4.3 star(s) from 10 votes
2nd Floor, 178-B, Kamarajar Salai
Madurai, 625009
India

Contact Details & Working Hours

Details

அமைப்பின் நோக்கம்

தற்போதைய மின்னணு (E-Governance) நிர்வாகத்தில் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கே இணைய (Internet) அறிவாற்றல் அனைவருக்கும் அத்தியாவசியமாக உள்ளது. இவற்றைப் பற்றி எங்கும் தெரிந்து கொள்ள முடியாமல் பலர் இந்த சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இக்குறையை போக்கும் வகையில் சாமானியர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள், சிறு வணிகர்கள், கிராமத்தினர் & இளைஞர்கள் ஆகியோருக்கு இணையம் (Internet), செயலி (Apps) மற்றும் ஆன்லைன் வணிகம் (E-Commerce) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வையும் அறிவாற்றலையும் வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வகுப்புகள் நடத்தப்படும்.



சிறுவணிகர்கள் :
உலக மயமாக்கல்கள் நடைபெறும் இந்நிலையில் சுயதொழில் புரியும் சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் நாள்தோறும் உள்நாட்டு & வெளிநாட்டு போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர். மாறிவரும் மக்கள் தேவை, தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றை உடனுக்குடன் அறியாதவர்களாய் அனைத்து செயல்பாடுகளும் கணினி மையமாக்கப்பட்டு வரும் இவ்வேளையில் சக வர்த்தகர்கள் & அரசாங்கத்திற்கான சமர்ப்பித்தல்கள் போன்றவற்றையும் தாமே கையாள முடியாதவர்களாய் உள்ளனர்.இவர்களை பயிற்றுவிப்பதன் மூலம் தமது தொழிலை இலகுவாக நிர்வாகிக்கவும் சர்வதேச தொடர்புகளுடன் தொழிலை வளர்க்கவும் இயன்றவர்களாக மாற்றலாம்.

குடும்ப பெண்கள் :
சாமானிய குடும்பப் பெண்கள் தமது படிக்கும் வயதில் இணைய & தொழில்நுட்ப வி­யங்களை கற்கும் வாய்ப்பில்லாதவர்கள். தற்போது அவை அத்தியாவசியமாக உள்ள நிலையிலும் உதாரணமாக... மின்சார கட்டணம் செலுத்துதல், தொலைபேசி கட்டணம் செலுத்துதல், வங்கி பண பரிவர்த்தனைகள் செய்தல், பயண சீட்டுகள் பதிவு செய்தல் போன்ற அன்றாட தேவைகளையும், மேலும் உறவினர்கள் நண்பர்களுடனும் கருத்துக்களை வேகமாக பரிமாறிக்கொள்ள இயலாதவர்களாகவும் தமது குழந்தைகளுடனும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். விழிப்புணர்வு இல்லாததால் பயத்தில் சமூக வலைத்தளங்களையும் ஸ்மார்ட் சாதனங்களையும் பயன்படுத்தும் குழந்தைகளையும் தடுக்க முற்படுகிறார்கள். இவர்களை பயிற்றுவிப்பதன் மூலம் அவர்களுக்குள்ள இடைவேளியை போக்கி அவர்களும் அதை பயன்படுத்தவும் தம் குழந்தைகளையும் ஆக்கப்பூர்வமாக வழி நடத்தி பயன்படுத்த செய்யவும் இயலும். மேலும் வீட்டிலிருந்தே வருவாய் ஈட்டும் பணிகளையும் செய்ய இயலும்.

முதியவர்கள் :
தற்காலத்து முதியவர்கள், ஒரு காலத்தில் பெரும் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் இண்டர்நெட் & ஸ்மார்ட் சாதனங்கள், சமூக வலைதளங்களைப் பற்றி விழிப்புணர்வோ அறிவாற்றலோ இல்லாததால், தாங்கள் இந்த சமுதாயத்திலிருந்து பின்தங்கியவர்களாக உணர்கிறார்கள். மேலும் தனது வாரிசுகளுடனே கூட பிணைப்பை உருவாக்கிக்கொள்ள முடியாதவர்களாய் உள்ளார்கள். அவர்களுக்கு தகந்த பயிற்சி அளிப்பதன் மூலம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களும் சுயதேவைக்காக பயன்படுத்தவும் இணையம் மூலமே அவர்களுக்கு அனுபவம் உள்ள பணிகளை இருந்த இடத்திலிருந்தே செய்யவும் அதாவது, கல்வி கற்பித்தல், ஆலோசனை வழங்குதல், ஆவணங்கள் தயாரித்தல், கட்டுரைகள் எழுதுதல் & பொருட்கள் விற்பனை போன்றவற்றை செய்ய இயலும். மேலும் இவற்றை கற்றுக்கொண்டு பயன்படுத்துவதால் சராசரி ஆயுள்காலம் 10 வருடங்கள் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.

இளைஞர்கள் :
இன்றைய இளைஞர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தையும் சாதனங்களையும் பயன்படுத்துவதில் வல்லவர்களாய் உள்ளார்கள். பெரும்பாலானவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அறிவாற்றலையும் மென்னாற்றலையும் வளர்த்து தனது இலக்கை அடையவும் அதன் மூலம் எதிர்காலத்தை வளமாக்கதக்க வகையில் பயிற்சியும் ஆலோசனையும் தேவைப்படுகிறது. அவற்றை வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப திறன் மிக்க ஆக்கப்பூர்வமான இளம் இந்தியர்களை நம் நாட்டிற்காக உருவாக்க முடியும்.


கிராம மக்கள் :
கிராமங்கள் தோறும் பயிற்சி மேற்கொள்ளுவதால் நகர்புறங்களுக்கு இணையாக
தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், கிராம மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். இதனால் நகர் & கிராம இடைவெளி குறைக்கப்படும். மேலும் புதுப் புது தகவல்களுடன் நவீன வேளாண்மையை மேற்கொள்ளவும், அரசின் ஊக்கதிட்டங்கள் & சலுகைகளை அறிந்து அதை நேரடியாக பெறவும், தனது உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்கவோ ஏற்றுமதி செய்யவோ இயலும்.

சவால்கள் & இடர்பாடுகள் - களைதலும் தற்காத்தலும் :
மேற்சொன்ன அனைத்து பயனாளர்களும் இன்றைய இண்டர்நெட் உலகிலும் அதன் பயன்பாட்டிலும் உள்ள இடர்பாடுகள் & சவால்களாகிய ஹேக்கிங், அட்டாக், இண்டர்நெட் பிராட் & சைபர் கிரைம் போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு வழங்கி அதிலிருந்து தற்காத்து கொண்டு பாதுகாப்பாக பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.

OTHER PLACES NEAR DIGITALL INDIA

Show more »