கொடை வள்ளல் J.K.K.Natarajah நினைவு இயக்கம் 3.18

230,Salem Main Road
Komarapalayam, 638183
India

About கொடை வள்ளல் J.K.K.Natarajah நினைவு இயக்கம்

கொடை வள்ளல் J.K.K.Natarajah நினைவு இயக்கம் கொடை வள்ளல் J.K.K.Natarajah நினைவு இயக்கம் is a well known place listed as Community Organization in Komarapalayam , Non-profit Organization in Komarapalayam , Social Services in Komarapalayam ,

Contact Details & Working Hours

Details

KODAI VALLAL J.K.K.NATARAJAH NINAIVU IYAKKAM
இது ஒரு அரசியல் கட்சி சார்பற்ற பொது நல அமைப்பாகும். இந்த அமைப்பின்
அடிப்படை நோக்கங்களையும் இலட்சியங்களையும் ஏற்றுக் கொள்பவர்கள்
இவ்வமைப்பில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம்.

மாணவர்கள், இளைஞ‌ர்கள், பெண்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில்
நாட்டுப்பற்று மொழிப்பற்று மற்றும் சமூக உணர்வு ஏற்படப் பாடுபடுதல்!

இளைஞ‌ர்களைத் தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும், இடைவிடாது உழைத்து முன்னேறி
அவரவர் துறையில் மிகச் சிறந்து விளங்கக் கூடியவர்களாகவும், த‌ன்ன‌ல‌ம‌ற்ற
தியாக‌
உள்ளமும் சேவையுணர்வும் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் உருவாக்க‌ப்பாடுப‌டுத‌ல்!

நம் நாட்டின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், கலை, இலக்கியம், வரலாறு,
குறிப்பாக விடுதலைப் போராட்ட வரலாறு முதலியவற்றை இளைய தலைமுறை முழுமையாக
அறிந்து கொள்ள பாடுபடுதல்!

"கடந்த கால இந்தியாவைப் படிப்போம், எதிர்கால இந்தியாவைப் படைப்போம்" என்ற
கோணத்தில் வரலாற்றை மக்களிடத்தில் கொண்டு செல்வதோடு, "இன்றைய தேசபக்தி
எது?" என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தப் பாடுபடுதல்!

மக்கள் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டு வந்து, நாட்டில்
தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல், கலப்படம், மோசடி முதலிய சமூகவிரோதச்
செயல்களைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுதல்!

கடமையைச் செய்யாமல் உரிமையைக் கோருவதோடு உரிமையை வழங்காமல் கடமையை
வழியுறுத்துவதோ தவறு என்பதையும் கடமையும் உரிமையும் இரண்டு கண்கள் என்பதை
மக்களிடத்தில் தெறிவுபடுத்திக் கடமையைச் சரிவரச் செய்யும் மனபக்குவத்தையும்
உரிமைகளை வழங்கும் மனநிலையையும் வளர்த்தெடுக்கப் பாடுபடுதல்!

மணாவர்கள் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் "தொழில்சார்ந்த,
உற்பத்திசார்ந்த சிந்தனைகளை வளரப்பதோடு தொழில் செழிக்காமல் நாடு
செழிக்காது" என்பதையும் நமது பொருள்கள் உலகளவில் தரமும் தகுதியும்
கொண்டதாக இருப்பதன் மூலமே "இந்தியா உலகிற்களிக்கும்" என்ற பாரதியின்
கூற்றை மெய்ப்பிக்க முடியும் என்பதையும் அனைவருக்கும் உணர்த்துதல்!

ஒவ்வொருவரும் சுயதொழில் அல்லது சுயவேலையைப் பெறுவதன் மூலம் தனிநபர்
வருமானத்தைப் பலமடங்கு பெருக்கி கொள்ள இயலும் என்ற கண்ணோட்டத்தை
உருவாக்குதல்! அதன் மூலம் அதிக வேலை வாய்ப்பும், நவீன உற்பத்திமுறையும்
குறைந்த மூலதனமும், சுயசார்பும் ஏற்றுமதி வாய்ப்பும், சிக்கனத்துடன்
கூடிய உலகத்தரமும் கொண்ட சிறிய நவீனத் தொழில்கள் நாடு முழுவதும் கொண்டு
வரப்பாடுபடுதல்! சிறிய நவீனத் தொழில்களுக்கு ஒத்துழைப்புத்தரும் வகையில்
பெருந்தொழில்கள் ஒழுங்குபடுத்துதல்! மேலும் அனைத்தும் தொழில்களின்
வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட போட்டிகளை ஊக்குவித்தல்!

கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை அனைத்து மக்களுக்கும்
ஏற்படுத்தி, நம்நாட்டில் இனி கல்வி கற்காதவரே இல்லை என்ற நிலையை
அடையப்பாடுபடுதல்! "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற
பழமொழிக்கு இணையாக "நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற
புதுமொழியை உருவாக்கி, அனைத்து ஊர்களிலும் நூலகங்கள் உருவாக‌ப்
பாடுப‌டுத‌ல்!

ஒவ்வொரு இல்ல‌த்திலும் சிறு நூல‌க‌ம் அமைக்கும் ப‌ழ‌க்க‌த்தைக் கொண்டு
வ‌ருத‌ல்! ந‌ல்ல‌ நூல்க‌ளைத் தொட‌ர்ந்து ப‌டித்து வ‌ருவ‌தன் மூல‌ம்
ம‌ட்டுமே, உல‌க‌த்தின் போக்கைப் புரிந்து கொள்ள இய‌லும் என்பதையும்
அந்நூல்க‌ளிலுள்ள உய‌ர்ந்த‌ க‌ருத்துக‌ளை உள்வாங்கிக் கொண்டால் தானும்
உய‌ர்ந்து, த‌ன‌து நாட்டையும் உய‌ரந்த க‌ருத்துக‌ளை உள்வாங்கிக் கொண்டால்
தானும் உய‌ர்ந்து, தன‌து நாட்டையும் உய‌ர்த்த‌ இய‌லும் என்ற நோக்கில்
"நல்ல நூல்க‌ளே ந‌ல்ல‌ நண்பர்க‌ள்" என்ற க‌ருத்தை ம‌க்க‌ளின் ம‌ன‌தில்
ஆழமாக‌ப் ப‌திய‌ வைத்த‌ல்.

மண், நீர், காற்று, வான் ஆகிய இயற்கைச் செல்வங்களை மாசுபடாமல்
பாதுகாப்பதன் மூலம் மட்டுமே மனித இனம் தொடர்ந்து இருந்து வரமுடியும்
என்பதை எல்லா மக்களுக்கும் உணர்த்தி, அனைவரிடமும் விழிப்புணர்வைக் கொண்டு
வந்து, இன்றைய நெருக்கடியான, மோசமான சூழ்நிலைளில் இருந்து இயற்கைச்
செல்வங்களைப் பாதுகாக்க மரம் நடுதல், வளர்த்தல் உள்ளிட்ட பல வகையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தல்! மேலும் சுற்றுப்புறத்தின் தூய்மையைப்
பாதுகாக்கப்பாடுபடுதல்!


ஆசிரியர்களே அடுத்த தலைமுறையின் இன்றைய அடித்தளம் என்பதாலும்,
மாணவர்களின் தலை சிறந்த வழிகாட்டிகளாக ஆசிரியர்களே விளங்கமுடியும்
என்பதாலும், நல்லுள்ளமும் நாட்டுப்பற்றும் பல்வகைத்திறனும் கொண்ட
ஆசிரியப்பெருமக்கள் ஏராளமாக உள்ளனர் என்பதாலும், அவ்வாறான ஆசிரியர்கள்
அனைவரையுன் ஒருங்கிணைத்துச் சமூக அக்கறையுடனும் இலட்சிய உணர்வுடனும்
எதிர்கால இந்தியாவை உருவாக்கிட வழிவகை செய்திடப் பாடுபடுதல்!

சகல துறைகளீலும் ஆண்களுடன் பெண்கள் சரிநிகர்கச் சமமாக முன்னேறப் பாடுபடுதல்!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சாதி-மதம் கடந்த மனிதநேயத்தை
அடிப்படையாகக் கொண்ட திருக்குறள் போன்ற சிறந்த நூல்களும்,வள்ள்லார் போன்ற
மதம் கடந்த ஆன்மீகத்தை நிலை நாட்டியர்களும் சுட்டிக்காட்டிய்வாறும் நம்
தமிழ்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும்,சாதி-மதம் கடந்த, சகோதர
மனப்பான்மையோடும் மத நல்லிணக்கத்தோடும் மனிதநேயத்தோடும் நிரந்தர
அமைதியோடும் வாழும், நிலை அமையப்பாடுபடுதல்!

சமூகத்தின் மேன்மைக்காகத் தொடரந்து வாழ்நாள் முழுவதும் தன்னலமற்றுப்
பாடுபட்டு வரும் நல்லறிஞர்களை அழைத்து வந்து அவர்களை கொளரவப்படுத்தி
அவர்களின் கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டு செல்லப் பாடுபடுதல்! மனித
குலத்தின் முன்னோற்றத்திற்காக உழைப்பதோடு பல துறைகளிலும் அப்பழுக்கற்ற
சேவை மூலம் சாதனை புரிந்து வரும் அற்புத இளைஞர்களைக் கண்டறிந்து
ஊக்கப்படுத்துதல்!

உலகம் முழுவதும் மனிதநேயத்தையும் அமைதியையும் பேச்சுரிமை, எழுத்துரிமை,
வாழ்வுரிமை போன்ற மனிதனின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கப்பாடுபடுதல்!