ஆரோக்கியம் ட்ரஸ்ட் மருத்துவமனை 3.29

211/A, T.H Road, Theradi, Thiruvottriyur
Chennai, 600019
India

About ஆரோக்கியம் ட்ரஸ்ட் மருத்துவமனை

ஆரோக்கியம் ட்ரஸ்ட் மருத்துவமனை ஆரோக்கியம் ட்ரஸ்ட் மருத்துவமனை is a well known place listed as Health/medical/pharmaceuticals in Chennai ,

Contact Details & Working Hours

Details

ஆரோக்கியம் அறக்கட்டளை

நோக்கம் ; அனைவருக்கும் சுகாதாரம் ; ஏழைகளுக்கும் தரமான மருத்துவம்

மருத்துவ துறையும் மருத்துவ மனைகளும் கார்பரேட் நிறுவனங்களைப் போன்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனேயே செயல்படுகின்றன. ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருக்கும் தரமான மருத்துவ வசதியை பெற்றுத் தருவது


செயல்பாடுகள்

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது

அரசு பொது மருத்துவமனைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது மற்றும் உதவிசெய்வது

பொதுமக்களிடம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

சுகாதாரத் துரையின் செயன்பாடுகளைக் கண்காணிப்பது மற்றும் உதவி செய்வது

இலவச மருத்துவமனை நடத்துவது

குடிநோயாளிகள் நிவாரண மையம் நடத்துவது
............................................................................................


D D CENTER
(DIPSOMANIA DETOXIFICATION CENTER)

குடிப்பழக்கம் என்பது ஒரு பழக்கவடிமை நோய்


குடிப்பழக்கம் ஒரு நோய்
'குடி பழக்கவடிமை ஒரு தனி மனிதன் சார்ந்த பிரச்சனை அல்ல. அது ஒரு தேசத்தின் பிரச்சனை'. - பாலசுப்ரமணியன்


அளவோடு குடிப்பது ஆரோக்கியமே அளவோடு குடிக்க முடியாமல் செய்வது குடிநோய்

தள்ளாடுவது குடித்தவர் மட்டுமல்ல தேசத்தின் மனிதவளம்

ஆணும் பெண்ணும் சமம் குடியிலுமா



சந்தித்த மனிதர்களில் வீடு வாசல் இல்லாமல் ரோட்டில் படுத்துறங்கும் வயோதிகர்கள் சிந்திக்க வைத்தவர்கள். அவர்களிடம் சிலநேரம் உரையாடி இருக்கின்றேன் அவர்களின் இளமைப் பருவம் பற்றி கேட்டிருக்கின்றேன் அவர்களா இவர்கள் என்று ஆச்சரியம் எனக்கு.

இருக்க இடம் இல்லாமல் நடைபாதையில் துயிலவில்லை. அவர்கள் சேர்த்துவைத்த பொருளும் முழுதாக கரைந்து போகவில்லை.

இளம் பருவத்தில் முழு பாட்டில் சாராயத்தைக் குடித்து நான் ஸ்டெடியாய் இருக்கேண்டா என்று நண்பர்களுக்கு கெத்து காட்டியவர்கள் முதுமையில் என்னுடன் உரையாடியதில்.

அன்று
வாலிபத்தில் கொலைகாரனாக நினைத்த பெண்களை நினைத்த நேரத்தில் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று அனுபவித்தவர்கள் பேட்டை ரௌடியாக எதற்கும் அடங்காத இவர்களைக் கண்டால் காவல் துறையினர் கூட அஞ்சி ஒதுங்கியதுண்டு. இவர்களின் முன்னாள் பயத்துடன் நிர்ப்பவர்களையும் இவர்களைக் கண்டு அஞ்சி ஒடுபவர்களையும் பார்த்து ரசிப்பது பொழுதுபோக்கு. அடியாட்கள் வேலை எதற்கும் அஞ்சாத முரட்டுத் தனம்.

இன்று

மெலிந்த நோய் குடியிருக்கும் தேகம் சவரம் செய்யாத தாடி தெரு ஓரம் சாலையின் பிளாட்பாரம் இவர்களது படுக்கை. நோய்நொடி என்றால் கவனிக்க ஆளில்லை. பெற்ற பிள்ளைகளோ வீட்டில் சேர்ப்பதில்லை.கட்டிய மனைவி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டிற்கு சென்றால் ஏச்சும் பேச்சும் எதிர்ப்புக் காட்டியதால் வீட்டை விட்டு வெளியேற்றம் சாகத் துணிவில்லை. எச்சில்கள் மீது படுக்கை. இவர் படுத்திய பாட்டுக்கு அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இதுதான் ரிவெஞ்ச


இவர்கள் இப்படியாகக் காரணமாய் இருந்து இவர்களுக்கு குடியும் மற்றதெல்லாம் கற்றுக் கொடுத்து இவர்களைப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொண்டவர்கள் எல்லாம் எல்லாம் இன்று பெரும் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாய் மனைவி மக்களுடன் மகிழ்வாய் வாழ்கின்றார்கள்

இது அவர்களின் மனசாட்சிப்படியான உண்மையான வாக்குமூலங்கள்.

இவர்களைப் போன்று இன்றைய மனிதவளம் வீனாகிப் போவதை வேடிக்கைபார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட எந்த ஒரு தேச நலனில் அக்கறை கொண்டவர்களாலும் முடியாது.

இவர்களைப் போன்று இன்றைய இளைஞர்கள் வாழும் காலத்தில் வீணாய் இருந்து வீழ்ந்த காலத்தில் பிச்சைகாரராக ஆகிவிடக் கூடாது. ஆகவே குடிப்பழக்கத்தைப் பற்றியும் அதினின்று வெளிவரும் வழிமுறைகளையும் இலவசமாக செய்யும் நோக்கில் D D CENTER
(DIPSOMANIA DETOXIFICATION CENTER) துவக்கப்படுகின்றது




-------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிடி செண்டர் அவசியம்

உலகத்திலேய அதிக மனித வளம் கொண்ட தேசம் அறிஞர்களை அறிவாளிகளை பொறியாளர்களை நல்ல மருத்துவர்களை உருவாக்கி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மனித வளம் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. அதிலும் தமிழர்கள் உலகம் முழுக்க இருக்கின்றார்கள்.

நல் ஒழுக்கமுடன் ஆரோக்கியமாய் வாழ உலகுக்கே வழிகாட்டிய நம் சித்தர்கள் வாழ்ந்த தமிழகத்தில் தான் மதுவால் அதிக உயிரிழப்பு என்று புள்ளிவிவரம் சொல்கின்றது.

தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை கொள்ளை மற்றும் விபத்துகள் இதை நிரூபிக்கின்றன.

விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து மதுவைக் குடிக்க அது உயிருக்கே உலை வைக்கும் யமனாக அதனின்றும் விடுபட வேண்டும் என்று முயன்றும் இயலாத நிலை.


இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களும் பெண்களும் குடிக்கு அடிமையாகி வருவது கலக்கமடையச் செய்கின்றது.

மது போதையால் உடல் நலமும் மனநலமும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதை இளம் சமுதாயத்திடம் விழிப்புணர்வை ஊட்டி போதை அரக்கனிடம் சிக்கி சீரழியாமல் நம் குழந்தைகளையும் பெண்களையும் காக்க வேண்டும் அதற்கான சிறிய முயற்சியே இந்நூல். இதைப் படித்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் தன பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை கொடுத்து வளர் இளம் சமுதாயத்தைக் காத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரோக்கியம் அறக்கட்டளை வெளியிடுகின்றது .

மது பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று முயன்றும் இயலாதவர்கள் உண்மையிலேயே இந்நோயில் இருந்து விடுபட வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்களுக்கு மதுப்பித்து டிடோக்க்ஸ் செண்டர் எனும் இலவச உதவி மையத்தை ஆரோக்கியம் அறக்கட்டளை மூலம் நடத்தி வருகின்றோம்.

OTHER PLACES NEAR ஆரோக்கியம் ட்ரஸ்ட் மருத்துவமனை

Show more »